Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

மின்சார கொள்முதல் மறு டெண்டரில் விலைப்புள்ளி 20% குறைவு: நிர்மல் குமார்

மின்சார கொள்முதல் மறு டெண்டரில் விலைப்புள்ளி 20% குறைவு: நிர்மல் குமார்

மின்சாரத்துறை சார்பில் கோயிலுக்கு தடையின்றி மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. எங்கெல்லாம் குறைபாடு, தவறுகள் உள்ளதோ அதை சரிசெய்து வருகிறோம்.

பகிரவும் WhatsApp Facebook

மின்சார கொள்முதல் மறுடெண்டர் விடப்பட்டதில், பழைய விலைப்புள்ளியை விட 15 முதல் 20 சதவீதம் வரை குறைந்துள்ளது என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

மதுரை வணிகவரித் துறை இணை ஆணையர் அலுவலக வளாகத்தில், பணியாளர் பயிற்சி கூடுதல் கட்டிடத்தை அமைச்சர் நிர்மல்குமார் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேனி சிறையில் கைதிகள் தப்பியோடியதைத் தொடர்ந்து, சிறைச்சாலை, காவல் நிலையங்களில் பாதுகாப்பு குறைபாடுகளை சரிசெய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.

குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்தபோது, மின்சாரம் தடைபட்டது. இதற்கு காரணம் அங்கு நடந்த பராமரிப்பு பணி. முக்கியமாக குடியரசு துணைத் தலைவர் வருகைக்காகவே தடையின்றி மின் விநியோகம் செய்யவே பராமரிப்பு பணி நடந்துள்ளது. அவர் புறப்பட்டுவிட்டார் என தவறுதலாக கருதி மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.

அந்த தவறுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சாரத்துறை சார்பில் கோயிலுக்கு தடையின்றி மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மின் விநியோகத்தில் எங்கெல்லாம் குறைபாடு, தவறுகள் உள்ளதோ அதை சரிசெய்து வருகிறோம். மின்வெட்டு பிரச்னைகளை முழுமையாக தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதுதொடர்பாக தவறான செய்திகள் பரப்பப்படுகிறது.

மதுரையில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மரியாதை செலுத்த வந்த மு.க.ஸ்டாலினுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டது. அதில் எந்த குறைபாடும் இல்லை. சிறைத்துறையில் காலிப்பணியிடங்கள் அனைத்தையும் நிரப்பும் நடவடிக்கை ஏற்கனவே துவங்கப்பட்டுள்ளது. சிறை, மின்துறைகளில் ஊழல் நடைபெறுவதை தடுத்துள்ளோம். முந்தைய ஆட்சி காலத்தில் குறிப்பிட்ட சில நிறுவனங்கள் மட்டுமே டெண்டரில் பங்கேற்கும் நிலை இருந்தது.

அதை ரத்து செய்து மறுடெண்டர் விடப்பட்ட இடங்களில் எல்லாம் தற்போது 17 முதல் 20 பேர் வரை பங்கேற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பழைய விலைப்புள்ளியை விட 15 முதல் 20 சதவீதம் வரை குறைந்துள்ளது. மின்சாரம் கொள்முதலில் நிறுவனங்களிடம் இருந்து நேரடி கொள்முதல் இருக்க கூடாது என்பதால் டெண்டர் முறையில் செய்யப்படுகிறது. நிர்வாகத்தை சீரமைக்கும் பணிகளும் நடந்து வருகிறது. சில மாதங்களில் நல்ல மாற்றம் ஏற்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முந்தைய செய்தி
சர்வதேச ஆடை வர்த்தகக் காட்சியில் பங்கேற்க அழைப்பு
அடுத்த செய்தி
உலகத் தமிழர் தொழில்முனைவோர் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு

தொடர்புடைய செய்திகள்